+2 முடித்து கல்லூரி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000.. பட்ஜெட்டில் அறிவிப்பு...யாரெல்லாம் தகுதியானவர்கள்? முழு விவரம்..

உயர்கல்வி படிக்கும் மாணவிகள் இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் அவர்கள் சேரும் முதல் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரிகளில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வகையில் மாதம் ரூ 1000 அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

மேலும் இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். 

Post a Comment

1 Comments