வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி அசானி புயலாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் புயலான அசானி வரும் 21-ந் தேதி அந்தமான் நிக்கோபர் தீவுகள் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று காலை தெற்க்கு வங்ககடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நிலவுகிறது
இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 19 ம் தேதி காலை நிலவக்கூடும்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.வட திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 20-ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-இல் புயலாக வலுப்பெறும். 21-ல் புயலாக உருவெடுத்து பின் வடக்கு- வடகிழக்கில் நகர்ந்து வங்கதேசம்- மியான்மர் கரையோரத்தில் 22-ல் நிலைபெறும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புயலுக்கு அசானி என பெயர் இடபட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு:-
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf