சுழல் வெப்தொடர் திரை விமர்சனம்

தமிழில் 'ஓரம் போ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. அந்த திரைப்பட வெற்றியை தொடர்ந்து, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கியுள்ளனர். 

இதையடுத்து இவர்கள் தற்போது திரைக்கதை எழுதியுள்ள வெப் தொடர் சூழல் இந்த வெப் தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் ஜூன் 17ஆம் தேதி முதல் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது


கதை:-

சாம்பலூர் எனும் மலை கிராமத்தில் 9 நாட்கள் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. முதலாம் நாள் திருவிழாவில் அந்த ஊரில் இரு பெரும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

சாம்பலூரில் சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் தொழிற் சங்கத் தலைவர் சண்முகம் (பார்த்திபன்) தலைமையில் நடக்கிறது. அன்றிரவே அந்த தொழிற்சாலை தீ விபத்து ஏற்படுகிறது,  யூனியன் லீடர் பார்த்திபன் மகள் நிலா காணாமல் போகிறாள்.

இந்த இரு பிரச்சனையையும் விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகளாக ஸ்ரேயா ரெட்டி மற்றும்கதிர் விசாரிக்கின்றார்கள் பார்த்திபனின் மூத்த பெண் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன் தங்கை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து அவரும் தீவிரமாக தேடுகிறார். 

கதிருக்கு சிசிடிவி கேமிரா பதிவில் நிலா ஒரு மாருதி வேனில் கடத்தப்படுவதையும் அதன் பின் தான் நிலாவும், ஸ்ரெயா ரெட்டியின் மகன் அதிசயம் உடன் சென்று விட்டார் என்பதை அறிகிறார். 

சில நாட்களுக்கு பிறகு நிலாவும் அதிசயமும் நீரில் மூழ்கி இறந்த சடலங்களை மீட்கிறார். இது தற்கொலையல்ல கொலை என்பதை கதிர் அறிகிறார். இந்த கொலைகளுக்கு காரணம் என்ன? யார் கொன்றார்கள்? தொழில்ற்சாலை தீ விபத்திற்கும், இந்த கொலைகளுக்கும் காரணம் என்ன? உண்மையான குற்றவாளியை இறுதியில் கண்டுபிடித்தனரா? என்பதே விறுவிறுப்பான என்பதுதான் திரைக்கதை

Post a Comment

0 Comments