திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்த தடை...

திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், ஷாம்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது



திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

கடைக்காரர்களும் பிளாஸ்டிக் கவர் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் மட்கும் காகிதங்களால் செய்யப்பட்ட கவர்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் 

மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும்  கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அலிப்பிரி சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

ஏற்க்கனவே  திருமலை மீது சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்த தடை உள்ளது. தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments