ஒரே ஷாட்டில் எடுக்கபட்ட இரவின் நிழல் திரைபட விமர்சனம்

நடிகர்கள்:-

பார்த்திபன், 

வரலக்‌ஷ்மி சரத்குமார், 

சினேகா குமாரி, 

பிரிகிடா சாகா, 

ரோபோ சங்கர்

பிரியங்கா ருத், 

ரேகா நாயர்

பிரிகடா 

ஜோஸ்வா, 

பிரவீன்குமார், 

சந்துரு, 

ஆனந்த் கிருஷ்ணன் 

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

ஒளிப்பதிவாளர்:- ஆர்தர் வில்சன்

இயக்கம்: பார்த்திபன் 



நான் லீனியர் என்றால் என்ன:-

உலகிலேயே முதல் முறையாக சிங்கிள் ஷாட் நான் லீனியர் படத்தை இயக்கி சினிமா வரலாற்றில் பார்த்திபனின் புதிய படைப்பு தான் இந்த இரவின் நிழல் திரைப்படம்.

அதாவது ஒரு திரைபடம் கதை நிகழும் காலம் சமகாலமாக இருந்து, கதைநிகழும் களமும் ஒரே இடமாக இருந்து  அதில் நடிப்பவர்களும் ஒருவரே நடித்து  அந்த படம் எடுக்கப்பட்டால்  அதனை எளிய விவரிப்பு முறை என்கின்றார்கள்

ஆனால்  அதுவே ஒரு திரைப்படம் கதை காலம் மாறுபட்டு , கதை வெவ்வெறு காலகட்டத்தில் நகர்ந்து, கதாபாத்திரங்கள் மாறுபட்டு அதில் நடை பெறும் சம்பவங்களின் வரிசையை முன்பின்னாகக் கலைத்துச் சொன்னால் அதை நான் லீனியர் முறை என்கின்றார்கள்

இதில் நான் லீனியர் திரைக்கதையில் எடுகப்ட்ட படம் தான் இரவின் நிழல்  அதுவும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள்ளது


ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம்:-

ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க முடியும்? என்ற கேள்விக்கு 

படம் ஆரம்பிதற்க்கு முன்பே 30 நிமிடங்கள் அடங்கும் மேக்கிங் வீடியோவில் சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் பதில் கூறியுள்ளார். இதன் பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு முழு படம் ஆரம்பிக்கிறது 

கிட்டத்தட்ட 93 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் பெரும்பாலான இடங்களில் அயர்ச்சி ஏற்படாதவாறு ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் பார்த்திபன். 

கதை:-

ஊரில் ஒரு மிகப்பெரிய பைனான்சியர் ஆக இருக்கும் பார்த்திபன்  நந்து (பார்த்திபன்) அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம், ஊடகங்களில் பேசுபொருளாகிறது.சினிமா பைனான்ஸியரான நந்து ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். 

இயக்குநரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நம்பும் அவருடைய மனைவியும் மகளும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறி காணாமல்போய் விடுகிறார்கள். ஃபைனான்சியர் நந்துவைக் கைதுசெய்ய போலீஸ் துரத்துகிறது.தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்புகின்றார்  பாழடைந்து, புதர்மண்டிக் கிடக்கும் தனக்கு மிகவும் பரிச்சயமான ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். 

அங்கு தன் செல்போனில் யாரும் அறியாத அவரது கதையை ஆடியோவாக சொல்கின்றார், ஒரு மனிதனின் பிறப்பும் வளர்ப்பும் சரியாக இருந்தால் ஒழுக்கமான வாழ்க்கை அமையும் இல்லையென்றால் நந்து வுக்கு நிகழும் வேதனைகள் மிகுந்த சோதனையான வாழ்க்கையே அமையும் என்பதே கதை

நந்து, ஒரு விலைமாதுவின் மகன். 

நிர்வாணமாக கிடக்கும் தாயின் மார்பில் பால் குடித்தவன். 

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் சொந்தக் காலில் நிற்க என்னவெல்லாம் செய்கின்றான்

சிறுவயதில் போலீஸ்காரரால் வன்புணர்வு செய்யப்படுகின்றான். 

கஞ்சா தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறான். 

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பணக்காரனாகி விடுகிறான்.

அதன்பிறகு அவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அதில் இச்சமூகம் மூலம் அவர் எப்படி இந்த இடத்திற்கு வந்தார்? இதற்காக அவர் என்னவெல்லாம் இழந்தார்? அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கான காரணங்கள் என்ன? என்பதை விவரிக்கிறது இரவின் நிழல் திரைப்படம்.

Post a Comment

0 Comments