சாய்பல்லவியின் கார்கி திரைப்படம் திரை விமர்சனம்

நடிகர்கள்:-

சாய் பல்லவி, 

காளி வெங்கட்,

ஆர்.எஸ். சிவாஜி,

ஜெயப்பிரகாஷ், 

ஐஸ்வர்யா லட்சுமி , 

லிவிங்ஸ்டன், 

சரவணன்

இசை:-

கோவிந்த் வசந்தா

இயக்கம்:-

கெளதம் ராமசந்திரன்



கார்கி கதை 

ஆசிரியராக  உள்ள கார்கி (சாய் பல்லவி) தனது அப்பா ஆர்.எஸ். சிவாஜியை காணவில்லை என தேட அடுக்குமாடி குடியிருப்பில் 9 வயது சிறுமி ஒருவர் 4 வட மாநில இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். அந்த குற்றத்திற்காக 4 பேருடன் சேர்த்து 5வது நபராக கைது செய்யப்பட்டு இருப்பது தெரிய அதிர்ச்சி அடைகிறார்.

எல்லா ஆதராங்களும் தனது தந்தைக்கு எதிராக இருக்க தனது அப்பாவை காப்பாற்ற போராடும் அவருக்கு வழக்கறிஞர்கள் கூட கிடைக்கவில்லை. திக்குவாய் வழக்கறிஞரான இந்திரன் (காளி வெங்கட்) அந்த வழக்கை எடுத்து நடத்துகின்றார். தனது தந்தை நிரபராதி என உறுதியாக நம்பும் சாய் பல்லவி சட்ட ரீதியாக தந்தையை விடுதலை செய்யப்போராடுகிறார். சாய் பல்லவியின் தந்தை விடுதலையானாரா இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

Post a Comment

0 Comments