செஸ் ஒலிம்பியாட் போட்டி டீசர் வீடியோவை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்


மாமல்லபுரத்தில் பல்லவர் கால கலைச்சிற்பங்களை காண உள்நாடு, சர்வதேச பயணியர் வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை இங்கு நடத்தப்பட உள்ளது. உலகம் முழுவதும் சர்வதேச செஸ் வீரர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர். மேலும்  மாமல்லபுரத்தில் வரும் 28 ம் தேதி துவங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் மோடி, அவசியம் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்

=செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வெளியாகியுள்ளது.முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், அதிதீ சங்கர் என பலர் நடித்திருக்கும் இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/rajinikanth/status/1547950359116582915

Post a Comment

0 Comments