9 ஆண்டுகளாக பஜ்ஜி எண்ணெயில் கார் ஓட்டும் நபர்!! முழு விவரம்...

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அவினாஷ் (40) என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக பஜ்ஜி பொறித்த எண்ணெயில் கார் ஓட்டி வருகின்றார் மேலும் இதுவரை அவர்  தனது காரில் 1.20 லட்சம் கி.மீ. வரை ஓட்டியுள்ளார்.




ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா சமைக்க, மீதம் உள்ள எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கி வருகிறார். அதன் பிறகு, அவர் அதை பல்வேறு நிலைகளில் சுத்திகரித்து எண்ணெயை எரிபொருளாக மாற்றுகிறார்.இதன்படி 1 லிட்டர் எண்ணெயில் இருந்து 700 முதல் 800 மில்லி எரிபொருள் கிடைக்கிறது. இதற்கான விலை லிட்டருக்கு 60 முதல் 65 ரூபாய். கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த ஆயிலை தனது காருக்கு பயன்படுத்தி வருகிறார்.இதுவரை 1.20 லட்சம் கி.மீ வரை ஓட்டியுள்ளார். இதனால், காரின் இன்ஜின் சேதமடையவில்லை.இது லிட்டருக்கு 15 முதல் 17 கிமீ ‘மைலேஜ்’ கிடைக்கும். இதை அனைத்து டீசல் வாகனங்களிலும் பயன்படுத்தலாம். 


இப்படி அவர் சுத்திகரித்த எண்ணெய் பயன்படுத்தி இதுவரை, சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்துள்ளார். இவரது காருக்கும் இதுவரை எந்த ஒரு பழுதும் ஏற்படவில்லை.இதனை அவர் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை செய்து வருகிறார். 

NEWS SOURCE:-

https://kannada.news18.com/amp/news/state/bangalore-men-avinash-narayanaswamy-innovation-a-car-running-for-9-years-through-fried-cooking-oil-hg-801123.html

Post a Comment

0 Comments