ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு சென்னை அணி போட்டிகள் முழு விவரம்.....

 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணை 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. 

 ஐபிஎல்  எந்த எந்த அணியில் யார் யார் முழு விவரம்....

ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்காக போட்டிவரும் 26ஆம் தேதி தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 65 நாட்கள் நீடிக்கும்  ஐபிஎல் தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகின்றன. 

இம்முறை ஐபிஎல் அணிகள் விர்ச்சுவலாக 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

அதன் படி குரூப் ஏ பிரிவில் 

மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

குருப் பி பிரிவில் 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும், ஒரு அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.மேலும், அடுத்த குரூப்பில் உள்ள 4 அணிகளிடம் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி மோதும் ஆட்டங்கள் விவரம்:-

மார்ச் 26 ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தனது முதல் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகின்றது 

மார்ச் 31ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வது ஆட்டத்தில் லக்னோ அணியுடன் மோதுகின்றது 

ஏப்ரல் 3ம் தேதி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தனது 3வது  ஆட்டத்தில்  பஞ்சாப் அணியுடனும் மோதுகின்றது 

ஏப்ரல் 9ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தனது 4வது ஆட்டத்தில்  ஐதராபாத் அணியுடனும் மோதுகின்றது 

ஏப்ரல் 12ஆம் தேதி சென்னை அணி தனது 5வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 

ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை அணி தனது 6 வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதுகிறது. 

ஏப்ரல் 21 ம்தேதி  சென்னை அணி தனது 7 வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதுகிறது. 

ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை அணி தனது 8 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. 

மே 1 ஆம் தேதி சென்னை அணி தனது 9 வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. 

மே 4ஆம் தேதி சென்னை அணி தனது 10 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதுகிறது, 

மே 8ம் தேதி சென்னை அணி தனது 11 வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியுடன் மோதுகிறது 

மே 12ம் தேதி சென்னை அணி தனது 12 வது லீக் ஆட்டத்தில் மும்பையுடன் மோதுகிறது, 

மே 15ம் தேதி சென்னை அணி தனது 13  வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதுகிறது. 

மே 20ம் தேதி சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.




Tags

Post a Comment

0 Comments