தற்போது இலங்கை தமிழர்களுக்கு டிவிகளை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்காக 109 இலவச கலர் டிவி களை வழங்கினார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்காக 109 இலவச கலர் டிவிக்களை வழங்கினார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என செய்தி வெளியிட்டுள்ளார்கள்
தமிழகத்தின் 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச ‘கலர் டிவி’ வழங்கப்படும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை கருணாநிதி அறிவித்தார். அதன்படி, 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. அனைத்து மக்களுக்கும் கலர் டிவியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது