புத்தக கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்த பிரபல நடிகை கையும்களவுமாக கைது..!

கொல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல நடிகை நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். 


மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம்  அங்கிருந்த சிலர் தங்களின் பர்ஸ்களை காணவில்லை என்று  போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்து சோதனை நடத்திய போலீசார், 30க்கும் மேற்பட்டோரின் பர்ஸ்கள் காணாமல் போயிருந்ததை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து புத்தக கண்காட்சி நடந்த மைதானத்தில் மெயின் கதவை மூடிய போலீசார், அங்கிருந்த அனைவரது உடமைகளையும் பரிசோதனை செய்தனர்.

அப்போது டி.வி நடிகை ரூபா தத்தா, திடீரென்று குப்பைக்கூடையில் எதையோ போட்டு மறைத்துக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே குப்பைக்கூடையை பரிசோதித்தபோது, அதில் ஏராளமான பர்ஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து வசமாக சிக்கிக்கொண்ட அவரிடம் இருந்து 65,760 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.பிறகு அத்தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

போலீசார் தொடர்ந்து விசாரித்ததில், இதுபோன்ற திருட்டுகளை நடிகை ரூபா தத்தா பல்வேறு இடங்களில் பல மாதங்களாக செய்து வந்ததை கண்டுபிடித்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் பெங்காலி நடிகையான ரூபா தத்தா பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். 

Post a Comment

0 Comments