நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்து தங்கம் வென்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த்! வீடியோ

தமிழ் திரைப்பட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் நீச்சல் வீரராக பல போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறார். அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். இப்போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.


புவனேஸ்வரில் உள்ள கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கம் வென்றார் வேதாந்த். இதற்கு முன்பு இதே போன்ற 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டில் நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்ற வேதாந்த், கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றார். தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/ActorMadhavan/status/1548656807631278080

Post a Comment

0 Comments