சரவணாஸ்டோர் அருள் நடிக்கும் லெஜண்ட் படத்தின் போ..போ பாடல் வெளியீடு.. பாடல் பார்க்க

சரவணா ஸ்டோர் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் தி லெஜண்ட் . ஜே.டி - ஜெரி இயக்கத்தில்,  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில்  வரும்  28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தி லெஜண்ட் படத்தை தமிழகம் எங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார்.



சிலநாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் 29 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மறைந்த நடிகர் விவேக் கடைசியாக இப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இந்த படத்தின் போ..போ.. பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை கே.கே பிரசாத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.


பாடலை பார்க்க:-

https://www.youtube.com/watch?v=F3QNDkE2h0Y

Post a Comment

0 Comments