மின் கட்டணம் கட்ட எங்கும் அலையாமல் நீங்கள் வீட்டில் இருந்தே உங்கள் மொபைல் மூலம் கட்டுவது எப்படி...முழு விவரம்

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  நீங்கள் கூகுள் பே, பேடிஎம் போன்ற மொபைல் ஆப் மூலமாக மின் கட்டணம் எவ்வாறு செலுத்துவது என்று இங்கே பார்க்கலாம்.




நீங்கள் ஒருமுறை சரியாக நுகர்வோர் ஐடி பதிவிட்டு உள்ளே சென்றுவிட்டால் அடுத்தடுத்த மாதந்தோறும் கட்டணங்கள் தாமாகவே காட்டப்படும்.


பேடிஎம்  மூலம் மின் கட்டணம் கட்ட

உங்களது பேடிஎம் மொபைல் செயலியை ஓப்பன் செய்து அதில் எலெக்ட்ரிசிட்டி போர்டை கிளிக் செய்யவும்.

அதில் தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு TNEB என்பதைத் தேர்வு செய்யவும்.

அடுத்து உங்களுடைய மின் நுகர்வோர் எண்ணை consumer number பதிவிடுங்கள் 

அடுத்து புரோமோ கோடு எதாவது இருந்தால் அதைப் பதிவிடலாம். கேஷ் பேக் போன்ற சலுகைகள் கிடைக்கும்.

அடுத்து பேமெண்ட் முறையைத் தேர்வு செய்து கட்டணத்தைச் செலுத்தவும் அவ்வளவுதான்

கூகுள் பே மூலம் மின் கட்டணம் கட்ட


கூகுள் பே மொபைல் ஆப்பை ஓப்பன் செய்து bill payments என்பதில் electricity என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு TNEB என்பதைத் தேர்வு செய்யவும்.

அடுத்து  Get started என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.அப்போது வரும் திரையில் உங்களுடைய மின் நுகர்வோர் எண் மற்றும் மண்டல எண் ஆகியவற்றை பதிவு செய்து விட்டு உங்கள் கணக்கை இணைக்கும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் உங்களுடைய நுகர்வோர் எண் மற்றும் பெயர் திரையில் வரும். அதை சரிப்பார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் கணக்கை இணைக்கும் விருபத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து நீங்கள் make payment என்பதைத் தேர்வு செய்தால் அதில் Pay a custom amount: Tap Make payment and enter the amount that you'd like to pay. Pay an available bill: on the bill, tap Pay Bill என்ற தகவல்கள் வரும்.

அதில் தேவையான ஆப்சனை நீங்கள் தேர்வு செய்து மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தலாம்.


மின் வாரியத்தின் அதிகாரபூர்வ ANGEDCO app மூலம் மின் கட்ட

மொபைல் போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் TANGEDCO app என டைப் செய்து டவுன் லோடு செய்து கொள்ள வேண்டும். 

இச்செயலியை பயன்படுத்தும் முன் மின்சார வாரிய இணையதளத்தில் பயனீட்டாளர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். 

அதன் பின் இச்செயலில் பயனீட்டாளரின் பெயர் மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தி மின் கட்டணத்தை செலுத்த முடியும். 

இந்த செயலி மூலம் செலுத்த வேண்டிய மின்கட்டண விவரங்கள், பதிவு செய்யாத மின் பயனீட்டாளர்களின் கட்டண்ங்களை செலுத்தும் வசதி, மின்சாரம் உபயோகித்தது பற்றிய கணக்கீடு, பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்


மின் வாரியத்தின் இணையதளத்தில் மின் கட்டணம் கட்ட

முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளத்திற்க்கு செல்லுங்கள் https://www.tnebnet.org/awp/userRegister?execution=e1s2 

அடுத்து உங்கள் ரீஜன் தேர்வு செய்யுங்கள் 

அதன்பின்பு உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவிடுங்கள்

அடுத்து உங்கள் விவரம் வரும் 

அதன் கிழ் அடுத்து என்பதை கிளிக் செய்யுங்கள் 

அடுத்து யூசர் நேம், பாஸ் வேர்டு,செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

அடுத்து நமக்கு அக்கவுண்ட் தயார் என்பதை தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். 

இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன்லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம். 

ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்புகளுக்குக் கட்டணம் செலுத்தலாம்.

Post a Comment

1 Comments