வாடகை வீட்டிற்கான ஒப்பந்த பத்திரம் எப்படி எழுதுவது என்று பார்க்கலாம்.
ஒப்பந்த படிவத்தில் வாடகைக்கு குடியிருப்பவரின் பெயர், வயது, முகவரி ,முகவரி சான்று எண், முன்பணம் எவ்வளவு மாத வாடகை எவ்வளவு பராமரிப்புத்தொகை, மின்கட்டணம், வெள்ளையடிப்பு, மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் கழிவுநீர் வரி கட்டணம், வாடகைதாரரின் கையொப்பம் வீட்டு உரிமையாளர் கையொப்பம் இந்த ஒப்பந்த படிவமானது 11 மாத காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஒருவேளை நீங்கள் 11 மாதத்தை கடந்தும் அந்த வீட்டில் வசிக்க நேர்ந்தால் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பித்து கொள்ளலாம்.
வாடகை வீட்டிற்கான ஒப்பந்த பத்திரம் மாதிரி
2022 ம் வருடம் பிப்ரவரி மாதம் ம் தேதி --------------------------------------------------------------------------------என்ற முகவரியில் வசிக்கும் --------------------அவர்களது மகன் ...................................................1வது பார்ட்டியாகவும்(வீட்டின் உரிமையாளர்) ..........................மாவட்டம்,--------------------------------------------------------என்ற முகவரியில் வசிக்கும் --------------------அவர்களது மகன் ................................................... 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்) மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான .......................................................................என்ற முகவரியில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் 1வது பார்ட்டியும் ,2 ம் பார்ட்டியும் சேர்ந்து யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்
- நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் 2000(ரூபாய் இரண்டு ஆயிரம் மட்டும் )பிரதி ஆங்கில மாதம் 5-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.
- 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி இன்று 10000 பத்தாயிரம் மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படிதொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்குவட்டி ஏதும் கிடையாது.
- 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும். மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.
- 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.
- 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணீர் போன்றவற்றிக்கு ரூபாய் ------------- பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.
- இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது ------ தேதி முதல் ------------ தேதி வரையிலான 11 மாத காலத்திற்கு உட்பட்டது.
- 11 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்புகொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.
- மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.
- 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.
- 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.
- 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.
இந்தபடிக்கு நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.
வீட்டு உரிமையாளர் வாடகை தாரர்
சாட்சிகள்:-
1
2.